கடினமான கணக்குகளையும் எளிதில்
கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு
எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய
வேண்டியது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.
==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது
எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக 15 * 17 ஐ எடுத்துக்கொள்வோம்.
இதில் முதல் எண்ணாண 15ஐ முழுமையாகவும், இரண்டாவது
எண்ணான 17ல் 7ஐ மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டிக்கொள்வோம்.
15 + 7 = 22
==> இதன் மூலம் வரும் கூட்டல் விடையை 10 ஆல் பெருக்க வேண்டும். வரும்
விடையை தனியாக எடுத்தெழுதி கொள்க.
22 * 10 = 220
==> அடுத்து, பெருக்க வேண்டிய இரண்டு எண்ணிலும் உள்ள
கடைசி எண்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றை ஒன்று பெருக்கிக் கொள்க.
15 * 17 = 5 7
5 * 7 = 35
==> தற்போது வந்த விடையையும், ஏற்கனவே 10ஆல்
பெருக்க கிடைத்த விடையையும் கூட்டிக்கொள்ள, இறுதி பெருக்கல் விடை கிடைத்து விடும்.
220 + 35 = 255
ஃ 15* 17 = 255...
மற்றுமொரு உதாரணமாக
18 * 14 = ?
(18+4) * 10 = 220
8*4 = 32
220 + 32
------
252
------
ஃ 18 * 14 = 252....
Source-www.dinakaran.com
Post Your Comments for this News
Related Articles