நாட்டில் பெண்கள் கல்வி குறித்து
நடத்தப்பட்ட ஆய்வில் தில்லி, கேரளா மற்றும் தமிழகம் சிறந்து விளங்குவதாக
ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
"டிஜிட்டல் பாலினம் அட்லஸ்" யுனிசெப் மூலம் பெண்கள்
கல்வி குறித்து துல்லியமான புள்ளியல் விவரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதில், தில்லி, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய
மாநிலங்களில் உள்ள பெண்களின் கல்விநிலை சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய
ஆய்வில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெண்களின் கல்வி நிலையை பொருத்தே, ஒரு நாட்டின் வளர்ச்சி அமைகிறது.
மேலும், "டிஜிட்டல் அட்லஸ்" வெளியிடப்படும் படம் பின்தங்கிய பகுதிகளில்
உள்ள பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று பள்ளி கல்வித்துறை
செயலாளர் விருந்தா ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
Source-dinamani
Post Your Comments for this News
Related Articles