பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான
ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக
உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு
ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான
கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல்
கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள்
கலந்தாய்வில் இடம்பெற உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள
4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 60 மையங்கள் மூலம் விண்ணப்பங்களை
நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை
விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில்
மட்டும் மே 29-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிகப்பட உள்ளன.
ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது.
இருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்
விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் பின்னர்
எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம்
தெரிவித்துள்ளது.
source:dinamani
Post Your Comments for this News
Related Articles